Published : 23,Nov 2018 05:50 AM
பாகிஸ்தான் சீன தூதரகத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்!

பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கிளிப்டன் பிளாக் 4 பகுதியில், சீன தூதரகம் உள்ளது. இதன் அருகில் குவைத், ரஷ்ய தூதரகம் மற்றும் பள்ளிகள், ரெஸ்டாரென்டுகள் இருக்கின்றன. சீன தூதரகத்துக்கு இன்று காலை ஆயுதங்களுடன் வந்த நான்கு பேர் உள்ளே நுழைய முயன்றுள்ளனர். பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர்.
Read Also -> ''உங்களது காரை இடித்தது என் பள்ளி வேன்'' - வைரலான பள்ளிக்குழந்தையின் குறிப்பு!
அப்போது திடீரென்று அந்த நால்வரின் ஒருவன் குண்டை வெடிக்கச் செய்தான். பின்னர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அங்கு நடந்துள்ளன. இதில் பாதுகாப்புக்கு நின்ற 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Read Also -> நடுவானில் போன் நம்பர் கேட்டு விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!
சீன தூதரக துணை அதிகாரி கூறும்போது, தூதரகத்துக்குள் நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். சம்பவ நடந்த இடத் துக்கு அருகில் வசிக்கும் செய்தியாளர் ஒருவர், ‘சில நிமிடங்களாக துப்பாக்கி சத்தத்தை நாங்கள் கேட்டோம். என்ன நடந்தது என்பதை உடன டியாக புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்தார்.
Read Also -> மீ டூ விவகாரம்: நடிகர் மோகன்லாலை சாடிய ரேவதி!
அந்த பகுதியில் கரும்புகை மேலெழுந்து செல்வதையும் புல்லட் சத்தங்கள் அதிகமாக கேட்பதையும் உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பி வருகின் றன. மேலதிக விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
சமீபத்தில் வந்த தகவலின் படி ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது என்றும் போலீசார் குவிக்கப் பட்டதை அடுத்து அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ’இன்னும் சண்டை முடியவில்லை. தப்பியோடிய வர்கள் அருகில்தான் இருப்பார்கள் என்பதால் அவர்களைத் தேடும்பணி நடந்துவருகிறது’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.