Published : 22,Nov 2018 04:14 PM

“விதைப்புச் சான்றிதழ் இருந்தால் பயிர்க்காப்பீடு பெறலாம்” - ககன் தீப் சிங் பேடி

insurance-can-be-obtained-by-sowing-certification-in-Gaja-cyclone---IAS-gagandeep-bedi

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விதைப்புச் சான்றிதழ் இருந்தாலே பயிர்க்காப்பீடு பெறலாம் என ககன் தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நாகை - வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடந்தது. இதனால் நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. மேலும் பலரும் தமது வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல மின்கம்பங்களும் சாய்ந்து ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் நாகை உள்ளிட்ட புயல் பாதிப்பு மாவங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து, அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு உயிரிழப்பு, வேளாண் பொருட்கள், கால்நடைகள் உள்ளிட்ட பலவற்றிற்கு இழப்பீடு தொகையை அறிவித்துள்ளது. 

            

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விதைப்புச் சான்றிதழ் இருந்தாலே பயிர்க்காப்பீடு பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விதைப்புச் சான்றிதழ் வழங்க வேளாண் உதவி அலுவலர்களுக்கு வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். வேதாரண்யத்தில் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்