தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 தினங்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also -> மழை.. எங்கெல்லாம் இன்று விடுமுறை தெரியுமா..?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி, எழும்பூர், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது. பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
Read Also -> கேட்ச், ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டதால் தோற்றோம்: தவான்
இதேபோன்று காஞ்சிபுரத்திலும் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். திருவாரூரில் பள்ளிகளுக்கு தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் நிர்மல் ராஜ் அறிவித்துள்ளார்.
Read Also -> டெல்லியில் இன்று பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..!
இதைத்தொடர்ந்து விழுப்புரம் மற்றும் திருவள்ளூரி லும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுசேரியிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தின் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide