டெல்லியில் மணமகனை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்ட நிலையிலும், தோளில் பாய்ந்த குண்டுடன் அவர் திருமண சடங்குகளை முடித்தார்.
டெல்லி மதங்கீர் பகுதியில் திங்கட்கிழமை இரவு திருமண ஊர்வல நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்துள்ளது. கான்பூரில் இருந்து உறவினர்கள் பூடை சூழ மணமகன் வீட்டார் திருமண மண்டபத்தை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். டிஜே இசை நிகழ்ச்சி உடன் மிகவும் உற்சாகமாக அந்த ஊர்வலம் நடைபெற்றது. இரவு சுமார் 10 மணியளவில் மண்டபத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் திடீரென மணமகன் பாதால் மீது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிக் குண்டானது பதால் வலது தோளில் பாய்ந்துள்ளது.
உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் மணமகன் பதாலை சேர்த்துள்ளனர். அவருக்கு சுமார் 3 மணி நேரம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், துப்பாக்கிக் குண்டினை எடுக்க முடியவில்லை. அவசர சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த கையோடு திருமண மண்டபத்திற்கு மணமகன் பதால் சென்றுள்ளார். துப்பாக்கி பாய்ந்த தோளோடு சென்று திருமணத்தை அவர் முடித்துள்ளார்.
பின்னர், திருமணம் முடிந்த கையோடு பதாலை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தோளில் உள்ள எலும்புகளுக்கு இடையில் குண்டு சிக்கிக் கொண்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்