தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து இதுவரை பதிவான மழையின் அளவு இயல்பைவிட 19 சதவிகிதம் குறைவு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை இயல்பாக பெய்யும் மழையின் அளவு 31 புள்ளி 6 செண்டி மீட்டராகும். ஆனால் 25 புள்ளி 5 சென்டி மீட்டர் அளவே மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 19 சதவிகிதம் குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் 55 புள்ளி 8 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில், 22 புள்ளி 5 சென்டி மீட்டர் மழைதான் பெய்துள்ளது.
சென்னையில் இதுவரை மழைப்பொழிவு இயல்பைவிட 60 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதேபோல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மழைப்பொழிவு இயல்பைவிட 60 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மழைப்பொழிவு இயல்பை விட 27 சதவிகிதமும், தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் முறையே 12, 10 மற்றும் 7 சதவிகிதம் கூடுதலாகவும் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
”நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன்”-சென்னை ஃபேன்ஸ்க்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி
உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுகவினர்
லடாக் பாங்காங் டிசோ ஏரியில் பாலம் கட்டும் சீனா - இந்தியாவின் பதில் என்ன?
நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!
மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்தது அறிவிப்பாகத்தான் உள்ளது - கடலூர் விவசாயிகள் புகார்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்