[X] Close

இந்த கண்ணாவா, அந்த கண்ணாவா? குழப்பிய நெட்டிசன்கள்

nettisans-confuses-rajesh-khanna-or-vinoth-khanna

பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் பாஜக எம்.பியாக இருக்கும் அவருக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் வினோத் கண்ணாவின் உடல்நிலை குறித்து அவரது மகன் ராகுல் கூறும்போது, வெள்ளிக்கிழமை நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நலம் சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார் என்று தெரிவித்தார். ஆனால் நெட்டிசன்கள், வினோத் கண்ணா புகைப்படத்துக்கு பதிலாக நடிகர் ராஜேஷ் கண்ணா புகைப்படத்தை போட்டு, இந்தச் செய்தியை வெளியிட்டதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இதற்கு டிவிட்டரில் கடும் கண்டங்கள் எழுப்பப்பட்டதையடுத்து புகைப்படத்தை அவர்கள் மாற்றினர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close