Published : 21,Nov 2018 07:18 AM

திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி முதலமைச்சரிடம் ஒப்படைப்பு 

Rs--1-crore-relief-fund-to-the-chief-minister

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரண நிதியை திமுக பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவு கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அதில், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. 

மேலும் ஏராளமானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணப்பணிக்காக ரூ. 1000 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சீரமைப்பு பணிகளும் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ள பட்டு வருகின்றன. 

இதனிடையே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப்பணிக்காக திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரண நிதியை திமுக பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், அரசுடன் சேர்ந்து நிவாரணப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவே நிதியை வழங்கியுள்ளோம் எனவும் அரசு அறிவித்த நிவாரண தொகையை உயர்த்தி வழங்க திமுக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்