சீதக்காதி படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியாகி வெற்றியடைந்தது. இதனையடுத்து தனது 25 ஆவது படமான "சீதக்காதி" மூலம் மீண்டும் பாலாஜி தரணிதரனுடன் இணைந்தார் விஜய் சேதுபதி. இப்படத்தில் நம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நாயகிகள் 5 பேர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மிகவும் வயதான தோற்றத்தில் கால் மேல் கால் போட்டு கொண்டு நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கும் ‘சீதக்காதி’ முதல் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதனையடுத்து கையில் வில்லுடன் வேடன் வேடத்தில் விஜய் சேதுபதி இருப்பது போல வெளியான போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில் நவம்பர் 16ம் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு என்று விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் சீதக்காதி படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 20ல் படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதியை காண அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்