[X] Close

“இசைநிகழ்ச்சி வருவாயில் ஒரு பகுதி நிவாரண நிதி” - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

AR-Rahman-Announce-Relief-Fund-for-Gaja-Cylone-Affected-Area

டொரோண்டோ இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி புயல் நிவாரணத்திற்கு வழங்கப்படும் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Image result for A.R.Rahman

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. புயல் ஓய்ந்தாலும் மக்களின் இன்னல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சூறைக்காற்றில் மேற்கூரைகள் பறந்த நிலையில், வீட்டிலிருக்கும் அனைத்து பொருள்களும் மழையால் சேதமடைந்தன. 


Advertisement

Image result for gaja cyclone

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண நிதி தொடர்பாக தனது ட்விட்டரில் தகவல் பதிவிட்டுள்ளார். அதில், “டிசம்பர் 24ல் டொரோண்டோவில் நடக்கவுள்ள இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close