சுழற்றினார் ஸ்மித், சுருண்டது மும்பை

சுழற்றினார் ஸ்மித், சுருண்டது மும்பை
சுழற்றினார் ஸ்மித், சுருண்டது மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி போராடி வென்றது.

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் இரண்டாவது போட்டியில் புனே அணியும் மும்பை அணியும் நேற்று மோதின.

டாஸ் வென்ற புனே அணி கேப்டன் ஸ்டீவன் சுமித், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்தது மும்பை அணி. பார்த்தீவ் பட்டேலும், பட்லரும் முதலில் களமிறங்கினர். முதல் விக்கெட்டு 45 ரன்கள் (4.2 ஓவர்) சேர்த்த இந்த ஜோடி, பின்னர் பிரிந்தது. பார்த்தீவ் பட்டேல் (19 ரன்), இம்ரான் தாஹிரின் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். தாஹிர் தனது அடுத்த ஓவரில், ரோகித் சர்மா (3 ரன்), பட்லர் (38 ரன்) ஆகியோரையும் சுருட்டினார் சுழலில். அடுத்து, வந்த ராயுடு (10 ரன்), குணால் பாண்ட்யா (3 ரன்), நிதிஷ் ராணா (34 ரன்) பொல்லார்ட் (27 ரன்) ஆகியோர் அடித்தது போதுமென்று நடையை கட்ட, மும்பைக்கு சிக்கல். ஆனால் கடைசி ஓவரில் பந்து வீசிய அசோக் திண்டாவின் தாராளத்தால் மும்பை அணி கொஞ்சம் நிமிர்ந்தது. திண்டா வீசிய அந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 4 சிக்சர், ஒரு பவுண்டரி என விளாசினார். கடைசியில் 184 ரன்களை எட்டியது மும்பை. புனே தரப்பில் இம்ரான் தாஹிர் ‌3 விக்கெட்டுகளும், ரஜத் பாட்டீயா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய புனே அணிக்கு தொடக்கமே சறுக்கல். மயங்க் அகர்வால் 6 ரன்களில் பெவிலியன் திரும்ப, அவருடன் இறங்கிய ரஹானே, சிக்சரும் ஃபோருமாக விளாசி 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தாலும் கேப்டன் ஸ்மித் பந்துகளை பவுண்டர்களுக்கு விரட்டுவதிலேயே குறியாக இருக்க, இலக்கை ஈசியாக எட்டியது புனே. ஸ்மித் 84 ரன்களும், தடுமாறிய தோனி 21 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து ஆட்டத்தை முடித்தனர். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவையென்ற நிலையில் ஸ்மித் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாசி வெற்றியை தேடித் தந்தது ரசிகர்களை குஷி படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com