[X] Close

சரத்குமார் வீட்டிலும் ரெய்டு

raid-in-sarathkumars-home-too

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றனர். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாயின. அவருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தினகரன் ஆதரவாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறையினர் தீடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு, கல்குவாரி மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த சரத்குமார், நேற்று திடீரென்று டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் அவரது கொட்டிவாக்கம் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close