Published : 18,Nov 2018 12:50 PM

மீண்டும் சபரிமலைக்கு செல்ல முயலும் மேரி ஸ்வீட்டி 

Mary-Sweety-makes-second-attempt-to-enter-Sabarimala--police-convince-her-to-turn-back

சபரிமலைக்கு செல்ல முயன்று ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்ட மேரி ஸ்வீட்டி இன்று மீண்டும் சபரிமலைக்கு செல்ல முயன்றுள்ளார். அவரிடம் திரும்ப செல்லுமாறு போலீசார் சமாதானம் பேசி வருகின்றனர். 

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும், கவிதா என்ற மற்றொரு பெண்ணும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர்.

அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்ற அவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதைத்தொடர்ந்து பம்பைக்கு வந்த 46 வயதான மேரி ஸ்வீட்டி, ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். அனைத்து மதங்களையும் தான் மதிப்பதாகவும், ஐயப்பனைக் காண வந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

இதையடுத்து அவரிடம் பேசிய போலீசார் அவரின் பயணத்தைத் தாங்கள் தடுக்க மாட்டோம் எனவும், அதேநேரம் அவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். இதைதொடர்ந்து மேரி திரும்பிச் சென்றார். இந்நிலையில், மேரி ஸ்வீட்டி இன்று மீண்டும் சபரிமலைக்கு செல்ல முயன்றுள்ளார். அவரிடம் திரும்ப செல்லுமாறு போலீசார் சமாதானம் பேசி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்