Published : 06,Apr 2017 11:59 AM

மெர்சிடிஸ் காரில் மோதி தூக்கி வீசப்பட்ட நபர்: பதற வைக்கும் காட்சி

Accident-in-Delhi--CCTV-footage

டெல்லியில் மெர்சிடிஸ் காரில் இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

டெல்லியில் ஒருவழிப் பாதையில் சென்று கொண்டிருந்த மெர்சிடிஸ் கார் ஒன்று அங்கிருந்த வளைவில் திடீரென யூ டர்ன் அடித்தது. அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர் காரில் வேகமாக மோதினார். இதனால் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்தார். மெர்சிடிஸ் காரில் வந்தவர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்