[X] Close

மீட்புப் பணிகள் மோசமாக இருக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு  

Stalin-visits-cyclone-Gaja-hit-fishing-hamlets

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளை திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்


Advertisement

கஜா புயலால் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்குப்புக்கு உள்ளாகியுள்ளன. கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு, தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர். 


Advertisement

கஜா புயலுக்கு 46 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் 26 பேர், பெண்கள் 17 பேர், குழந்தைகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக புதுக்கோட்டையில் 7 பேரும், தஞ்சையில் 4 பேரும், கடலூரில் 3 பேரும் புயலால் உயிரிழந்துள்ளனர். திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் தலா 2 பேர் உள்பட இதுவரை 46 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை தமிழக எதிர்க்கட்சித்தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். அதன்படி நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். தரங்கம்பாடி கடற்கரையோர மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து, நிவாரணப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின், ''முன்னேற்பாடு நடவடிக்கைகளை பாராட்டியிருந்தேன். ஆனால், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் மீட்புப் பணிகள் படுமோசமாக இருக்கிறது. குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை'' என்று குற்றம் சாட்டியிருந்தார். 


Advertisement

இரண்டாம் நாளான இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப்பொருட்களையும் வழங்கி வருகிறார்.


Advertisement

Advertisement
[X] Close