[X] Close

காஷ்மீரில் பாக். தேசிய கீதம்: கிரிக்கெட் வீரர்கள் கைது

Kashmiri-cricketers-seen-singing-Pakistan-national-anthem-detained

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உடையை அணிந்து விளையாடிய காஷ்மீரைச் சார்ந்த 11 கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

மத்திய காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ளது கல்முல். இங்குள்ள காஷ்மீர் கிரிக்கெட் கிளப் உறுப்பினர்கள், கடந்த 2-ம் தேதி கிரிக்கெட் ஆடினர். அவர்கள், காஷ்மீர் கிரிக்கெட் வீரர்கள் அணியும் உடையை அணிந்து ஆட்டத்தில் பங்கேற்றனர். ஆட்டம் தொடங்கும் முன் பாகிஸ்தான் தேசிய கீதத்தையும் பாடியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. இதையடுத்து அந்த வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வீடியோ காட்சி ‘காஷ்மீர் மீடியா சேவை’ என்ற பாகிஸ்தானை சேர்ந்த செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்தப் போட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் சுரங்கப் பாதையை திறந்து வைத்த நாளன்று நடைப்பெற்றதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close