கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெண்ணியவாதியான ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Read Also -> தகாத உறவு, பாசம், பழிவாங்கல், கொலை: சினிமாவை மிஞ்சும் ஒரு கிரைம் ஸ்டோரி!
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் சபரிமலை கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. அப்போது பெண்ணியவாதியான ரெஹானா பாத்திமா என்பவர் சபரிமலைக்கு செல்ல முயன்றார். இருமுடி அணிந்துகொண்டு கருப்பு உடையில் ஐயப்ப பக்தர் போன்று ரெஹானா கோயிலுக்கு செல்ல முயன்றார். சபரிமலை சன்னிதானத்தின் நடைப்பந்தல் வரை பாதுகாப்புடன் ரெஹானா அழைத்து செல்லப்பட்ட நிலையில் அதற்கு மேல் அனுப்ப மறுப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெஹானா பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
Read Also -> 'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு
இதனிடையே ரெஹானா பாத்திமா சில சர்ச்சைக்குரிய பதிவுகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் இந்த பதிவுகள் இருப்பதாக கூறி பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. ரெஹானா பாத்திமாவின் பதிவுகள் மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் இருப்பதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பத்தனம்திட்டா போலீசார் ரெஹானா பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி ரெஹானா பாத்திமா கேரள உயர்நீதிமன்றத்தை நாடினார். அவரின் முன்ஜாமீன் மனுவை தற்போது கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்தோடு போலீசார் தேவையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்