[X] Close

தகாத உறவு, பாசம், பழிவாங்கல், கொலை: சினிமாவை மிஞ்சும் ஒரு கிரைம் ஸ்டோரி!

Gurugram-balcony-murder-plot-has-more-twists---turns

குடும்பங்களை சிதைக்கும் தகாத உறவு கதைகளை ஏராளமாகக் கேள்விபட்டிருப்போம். இதுவும் அதுபோன்ற கதைதான். ஆனால், சினிமாவை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது இந்த நிஜ த்ரில்லர் கொலை!

கடந்த மாதம் 27 ஆம் தேதி ஹரியானா அருகில் உள்ள குருகிராமில் 8 வது மாடியில் இருந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானது. அன்று, வட இந்திய பெண்கள் கடைபிடிக்கும் ’கர்வா சாத்’ என்கிற பூஜை நாள். அதாவது கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க பெண்கள், விரதம் இருக்கும் நாள்.

Read Also -> 'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு


Advertisement

(விக்ரம் - தீபிகா)

விசாரணைக்கு வந்த போலீசாரிடம், ’ என் மனைவி தீபிகா, நான் நீண்ட ஆயுளுடன் இருக்க விரதம் இருந்தாள். ஆனால் திடீரென்று தற்கொலை செய்துகொண்டாள்’ என்றார் அந்தப் பெண்ணின் கணவர் விக்ரம். முதலில் நம்பிய போலீசாருக்கு பிறகு வீட்டை சோதனை செய்த போது லேசாக சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் வீட்டில் பொருட்கள் அங்கும் இங்கும் அலங்கோலமாக சிதறி கிடந்தன. பின்னர் அவரது அக்கம் பக்கத்து வீட்டினரிடம் விசாரித்ததில் அது தற்கொலை அல்ல, கொலை என்பது உறுதியானது.பின்னர் விக்ரமை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ’கடுமையாக’ விசாரிக்க, வேறு வழியின் உண்மையை ஒப்புக்கொண்டார் விக்ரம்!

Read Also -> மண்டலப் பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு 

(ஷெஃபாலி பாசின் திவாரி)

குருகிராமில் அன்சால் வாலே வியூ சொசைட்டியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் ஷெஃபாலி பாசின் திவாரி (35). இவர் தனது கல்லூரி நண்பரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஷெஃபாலிக்கு இங்கு இரண்டு பிளாட்கள் இருந்தன. அதில் ஒன்றை விற்க முடிவு செய்தார். 2015 ஆம் ஆண்டு அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விக்ரம் சவுகான் என்பவரிடம் சொன்னார். அவர் விற்றுக் கொடுத்தார். இருவரும் ஒரே பிளாட் என்பதால் தினமும் காலையில் வாக்கிங் போகும்போது சந்தித்துக்கொண்டனர். இந்த நட்பின் காரணமாக, பேசிப் பழகினர். நாட்கள் செல்ல, செல்ல, ஷெஃபாலியின் அழகில் விக்ரமும் விக்ரமின் அழகில் ஷெஃபாலியும் விழ, காதல் வயப்பட்டனர். முதலில் பேச்சு, சிரிப்பு, மெசேஜ் என்று சென்று கொண்டிருந்த இவர்கள் பிறகு தகாத உறவு வரை வந்தது.

Read Also -> பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு 

(தீபிகா)
 
விக்ரமுக்கு தீபிகா என்ற மனைவி, இரண்டு குழந்தைகள். தீபிகா வங்கி ஒன்றின் மூத்த அதிகாரி. ஷெஃபாலி அடிக்கடி விக்ரம் வீட்டுக்கு வரு வார். வீட்டில் எல்லோரிடமும் அன்பாக பழகுவார். இதை தவறாக நினைத்துக்கொள்ளவில்லை தீபிகா. ஆனால், நாட்கள் செல்ல செல்ல, தனது கணவரும் ஷெஃபாலியும் தவறான காதலில் இருப்பதை உணர்ந்து கொண்ட அவர், கணவரிடன் சண்டைப் போட்டுள்ளார். இது குடும்பத்துக்குள் பிரச்னையானது.

இதற்கிடையே ஷெஃபாலியும் விக்ரமும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதற்கு முன்னதாக, இருவருக்கும் விவாகரத்து வேண்டும். ஷெஃபாலி, தனது கணவரிடம் விவாகரத்து பற்றி கேட்க, ஓகே சொல்லிவிட்டார் அவர். ஆனால், தீபிகா ஒப்புக்கொள்ள வில்லை. இதனால் ஷெஃபாலி ஏமாற்றமடைந்தார். 


இதையடுத்து ஷெஃபாலியும் விக்ரமும் லே-லடாக்கிற்கு சுற்றுலா சென்றனர். அங்கு, ‘என்னால் உன்னை பிரிந்து வாழ முடியாது. நாம் ஒன்றாக வாழ, ஒரே வழிதான் இருக்கிறது’ என்று விக்ரமிடம் சொன்னார் ஷெஃபாலி. ’என்ன ?’ என்று கேட்டார் அவர். பிரியங்காவை தீர்த்து கட்டிவிட்டு சத்தம் போடாமல், தற்கொலை என்று நாடகமாடி விடுவோம்’ என்றார். அதற்கான திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார், ஷெஃபாலி. அதை அரங்கேற்ற முடிவு செய்தார் விக்ரம்.

அதன்படி, மனைவி மற்றும் குழந்தைகளை கடந்த மாதம் 24 ஆம் தேதி நானிடாலுக்கு பிக்னிக் அழைத்துச் சென்றார் விக்ரம். அங்கு உயரமான பாறைக்கு அழைத்துச் சென்று பிரியங்காவை கீழே தள்ளிவிடுவதுதான் திட்டம். ஆனால், இந்த திட்டத்தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ, ஓட்டல் ரூமை விட்டு வெளியே வரமாட்டேன் என்று இருந்துவிட்டார் தீபிகா

(தீபிகா)

இதுபற்றி அங்கிருந்தபடியே ஷெஃபாலிக்கு அப்டேட் செய்திருக்கிறார் விக்ரம். ‘ச்சே தப்பிச்சுட்டாளே’ என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார் அவர். பின்னர் வீட்டுக்குத் திரும்பி இருக்கிறார் விக்ரம். அங்கு அவரது பெற்றோர் இருந்தனர். அவர்கள் சமாதானம் செய்து பார்த்தனர். விக்ரம் கேட்பதாகத் தெரியவில்லை. பின்னர், சண்டை போடாமல் இருங்க என்று அறிவுரை கூறிவிட்டு, கடந்த 29 ஆம் தேதி அவர்கள் கிளம்பிச் சென்ற னர்.

அவர்கள் சென்ற பின், பால்கனியில் இருந்து தீபிகாவை தள்ளி விட முயற்சி செய்தார் விக்ரம். இதைப் புரிந்து கொண்ட அவர், தனது குழந்தை களுக்காகத் தான் வாழ வேண்டும், என்னை கொன்றுவிடாதே என்று கதறியிருக்கிறார். ஆனால், இந்த கதறலை, விக்ரமின் தகாத உறவு மறைத்துவிட்டது. பால்கனியில் இருந்து பலவந்தமாக அவரைத் தள்ளிவிட்டார் விக்ரம். அலறிபடியே கீழே விழுந்து உயிர் விட்டார் தீபிகா. இதை அக்கம் பக்கத்து வீட்டினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தது போது விக்ரமின் குழந்தைகள் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். 

பிறகு ஒன்றும் நடக்காதது போல ஷெஃபாலிக்கு தகவல் தெரிவித்துவிட்டு போலீசில் புகார் செய்திருக்கிறார் விக்ரம். போலீசார், விக்ரம், ஷெஃபாலியின் மொபைல் மெசேஜ், இமெயில் உள்ளிட்டவற்றை சோதனை செய்து பார்த்ததில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதையடுத்து முதலில் விக்ரமை கைது செய்த போலீசார், ஷெஃபாலியை நேற்று கைது செய்துள்ளனர். அவர், விக்ரமின் குழந்தையை வயிற்றில் சுமந்துவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close