[X] Close

புயல் தொடர்பான நடவடிக்கை... மு.க.ஸ்டாலின் பாராட்டு

MK-Stalin-wishes-tn-government

புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Advertisement

கஜா புயல் தொடர்பாக பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்தன. அதன்படி தாழ்வான, குடிசை பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் புயல் கரையை கடக்கும் முன்பே நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும் தமிழகத்தின் பல மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதி தீவிர புயலான கஜா காலை 6 மணிக்கு கரையை கடந்ததாக சென்னை வானிலை மைய ‌இயக்கு‌நர் புவியரசன் தெரிவித்தார். தற்போது கஜா, புயலாக திண்டுக்கல்லுக்கு அருகே மையம் கொண்டுள்ளது. புயலால் ஏராளமான மின்கம்பங்கள் சேதடைந்து விழுந்துள்ள. மரங்கள் அடியோடு சாய்ந்து கிடக்கின்றன. மழை நின்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Read Also -> கஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு


Advertisement

Read Also -> திண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு  

இந்நிலையில் புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அரசு மேற்கொள்ளும் மீட்புப்பணிகளுடன் திமுக தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close