[X] Close

கஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு

Gaja-Cyclone--CM-Ordered-to-take-necessary-action

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

கஜா புயலால் நாகை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. புயல் காற்று வீசியதால் பல இடங்களில் மரங்களும் , மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. வீடுகளின் மேற்கூரை‌கள் தூக்கி வீசப்பட்டன. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைவுப்படுத்த மின்துறை, சுகாதாரத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த விவரங்களை அமைச்சர்களிடம் தொலைபேசியில் கேட்டறிந்த முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சேத விவரங்களை கணக்கிட்டு போர்க்கால அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவித்துள்ளார்.

Read Also -> புயல் தொடர்பான நடவடிக்கை... மு.க.ஸ்டாலின் பாராட்டு  


Advertisement

இதனிடையே கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் 82 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் குடிசை, மின்கம்பங்கள் சேத நிலவரம் குறித்து கணக்கிடப்பட்டு வருவதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close