[X] Close

 ‘கஜா’ புயல் காரணமாக  7 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை

Kaja-Cyclone--Leave-for-School-and-Colleges-in-7-Districts

‘கஜா’ புயல் எச்சரிக்கை காரணமாக 7 மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல், கடலூர்- பாம்பன் இடையே  இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயலினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய‌ பகுதிகளில் சேதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடுகள் மற்றும் ஷீட் வீடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 


Advertisement

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘கஜா’ புயல் எச்சரிக்கை காரணமாக திருவாரூர், ராமநாதபுரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

புயல் இரவு கரையைக் கடக்கவுள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதேபோல புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கஜா’ புயல் நாகை மாவட்டத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் முன்னதாகவே நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close