Published : 06,Apr 2017 04:14 AM

செய்தித்தாள் மூலம் தலாக்! கணவன் மீது மனைவி புகார்

Man-divorces-wife-through-newspaper-advertisement

ஹைதராபாத்தில் செய்தித்தாள் விளம்பரம் மூலம் விவகாரத்துக்கான தலாக் அறிவிப்பை வெளியிட்ட கணவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் முகமது முஸ்தாகுதீன். சவுதி அரேபியாவில் வேலைபார்க்கிறார். ஹைதராபாத்தில் இருக்கும் தனது மனைவியை விவகாரத்து செய்ய முடிவெடுத்த முஸ்தாகுதீன், உருது செய்தித்தாளில் விளம்பரம் செய்து அதன் மூலம் தலாக் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். வழக்கறிஞர் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டாராம். இது தொடர்பாக அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் முஸ்தாகுதீன் மீது வழக்குப்பதிவு செய்தனர். கடந்த மாதம் இதே போல மற்றொரு வழக்கில் போஸ்ட் கார்டு மூலம் தலாக் அறிவித்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்