[X] Close

அது மோசடி வீடியோவாம்: அடித்துச் சொல்லுது அதிமுக அம்மா அணி

viral-video-about-ttv-dhinakaran-team-gave-money-for-vote

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவது போன்று வெளியா‌கி இருக்கும் வீடியோ திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் மோசடியாகத் தயாரிக்கப்பட்டது என அதிமுக அம்மா அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு அவர்கள் அனுப்பி உள்ள புகார் மனுவில், மோசடி வீடியோவை வெளியிட்டு வாக்காளர்களைத் திசைதிருப்பும் முயற்சியில் திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. டிடிவி தினகரனுக்கு எதிரான அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி தேர்தல் ஆணையம் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக அம்மா அணி வலியுறுத்தி உள்ளது. தொப்பி சின்னத்துக்கு வாக்களிக்கக் கூறி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாக்காளர்களுக்கு கொடுக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அதிமுக அம்மா கட்சியினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close