[X] Close

கஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Gaja-Cyclone-warning--Today-leave-for-school-and-colleges-in-cuddalore

கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல், கடலூர்- பாம்பன் இடையே நாளை மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய‌ பகுதிகளில் சேதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடுகள் மற்றும் ஷீட் வீடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


Advertisement

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close