இன்று மாலையில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யத்துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் நாளை மதியம் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் தென் மேற்கு திசை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 570 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 670 கிலோ மீட்டர் தூரத்திலும் கஜா புயல் உள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வும் மையம் கூறியுள்ளது.
புயலினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சேதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடுகள் மற்றும் ஷீட் வீடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ள நிலையில், இன்று மாலையில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் எனவும் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை அதீத மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் அலை ஒரு மீட்டருக்கும் மேல் உயரக்கூடும் என்பதால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!