[X] Close

அடேங்கப்பா 350 வயதில் மனிதர் இருக்கிறாரா..?

350-Year-Old-alive-in-Nation-

ஒருவர் 350 வரை உயிருடன் இருக்க முடியுமா..? அப்படி யாரேனும் இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? அப்படி உண்மையில் இருந்தால் நிச்சயம் அது உலக அதிசயமாகத் தானே இருந்திருக்க முடியும். ஆனால் ஆந்திராவில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஒருவரின் வயது 350 ஆக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநில அரசின் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் விவரம் உள்ளது. இதில் வாக்காளர் ஒருவரின் வயது 350 என குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அவரின் வயது 350 இல்லை. அது தவறாக குறிப்பிடப்பட்ட தகவல். இதனையடுத்து மென்பொருள் இன்ஜினியரான லோகேஸ்வரர் ரெட்டி தலைமையிலான குழுவினர் வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் வாக்காளர் பட்டியலில் 15 சதவீத வாக்காளர்களின் விவரங்கள் தவறானவை என தெரியவந்துள்ளது.


Advertisement

அதாவது போலி விவரங்கள், முறைகேடான தகவல்கள், திரும்ப திரும்ப ஒருவரின் பெயர்கள் இடம்பெற்றது என பல தவறுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. மொத்தமாக ஆந்திராவில் 3.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 52.67 லட்ச வாக்காளர்களின் விவரங்களில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதனை சரிசெய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close