
கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் பட்டியலில் இந்த வருடமும் சன்னி லியோன் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாகவே அவர்தான் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில், கூகுள் தேடலில் முதலிடம் பிடிக்கும் பிரபலங்களை கூகுள் வெளியிடுவது வழக்கம். இதில் கடந்த நான்கு வருடங்களாக சன்னி லியோன் முதலிடத்தில் இருந்தார். இப்போதும் அவரே முதலிடத்தில் நீடிக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான், பிரியங்கா சோப்ரா இரண்டாம் இடத்தையும் தீபிகா படுகோன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இளம் நடிகர்கள் பட்டியலில் வருண் தாவன், நடிகை அலியா பட் ஆகியோர் டிரெண்டிங்கில் உள்ளனர்.
‘இந்திய ரசிகர்களை நினைச்சா சந்தோஷமா இருக்கு. என் மீது அதிக அன்பு வைத்துள்ள அவர்களுக்கு நன்றி’என்று கூறியுள்ளார் சன்னி லியோன்.