[X] Close

ரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா ? ஆதரவும் எதிர்ப்பும்

Should-Rajini-is-liable-to-answer-all-the-questions--

"எந்த ஏழு பேர் ?" என்ற கேள்விதான் தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக வலம் வந்துக்கொண்டு இருக்கிறது. "எந்த ஏழு பேர்" என்ற கேள்வியை எழுப்பியவர் நடிகர் ரஜினிகாந்த். சில ஆண்டுகளுக்கு முன்பாக வரை பெரும்பாலும் பேட்டிகளை தவிர்ப்பவர் ரஜினிகாந்த். ஆனால், ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்த பின்பு, அவ்வப்போது பேட்டிகளும், ட்விட்டரில் கருத்தும் தெரிவித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி போராட்டம் குறித்து சென்னை விமான நிலையத்தில் ரஜினி அளித்த பேட்டியும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் தனது கருத்தில் கடைசி வரை உறுதியோடு இருந்தார் ரஜினிகாந்த்.

Read Also -> “ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா?” - ரஜினி 


Advertisement

பொதுவாக ரஜினி அளிக்கும் பதில்தான் சர்ச்சையாகும், ஆனால் இம்முறை கேள்வி கேட்ட செய்தியாளரிடம் திருப்பி ரஜினி எழுப்பிய கேள்விதான் சர்ச்சையானது. சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் "7 பேர் விடுதலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அதற்கு ரஜினி "எந்த 7 பேர் ?" என திரும்ப கேட்டார். செய்தியாளர்கள் மீண்டும் விளக்கியபோதும் "அது பற்றி எனக்கு தெரியாது" என்று பதிலளித்தார். ரஜினி எழுப்பிய இந்த கேள்வியாலும், மீண்டும் அளித்த பதிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read Also -> அந்த 7 பேரை தெரியாத அளவிற்கு முட்டாள் அல்ல - ரஜினிகாந்த் பேட்டி 

இது குறித்து அரசியல் தலைவர்களும், சமூக வலைத்தளங்களிலும் இரு வேறு கருத்து நிலவுகிறது. ஒன்று ரஜினி என்பதால் அவருக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, இன்னொன்று அரசியலுக்கு வரப்போகிறவர் ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை பற்றி கூட தெரியாமல் இருப்பாரா என்றும் கேட்கின்றனர். ரஜினியின் இந்த சர்ச்சை குறித்து இன்று தனது கருத்தை தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் "ஏழு பேர் விடுதலை தொடர்பாகவும், பாஜக தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியை ரஜினி முழுமையாக உளவாங்கவில்லை. மீண்டும் ஒருமுறை இந்த கேள்விகளை கேட்டால் ரஜினி வேறு பதிலை அளிப்பார்" என தெரிவித்திருந்தார்.

Read ALso -> பாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம் 

ரஜினிக்கு ராஜீவ் கொலையும் தெரியும், சிறையில் இருக்கும் கொலை குற்றவாளிகளையும் தெரியும். ஏனென்றால் பேரறிவாளன் பரோலில் வந்திருந்தபோது  அவரிடம்,  தொலைபேசியில் பேசிய ரஜினி விரைவில் நீங்கள் விடுதலை ஆவீர்கள் என்று ஆறுதல் கூறினார். இதையெல்லாம் செய்த ரஜினி 7 பேர் விடுதலை குறித்து தெரியாது என கூறியது ஏன் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. பெங்களூரில் இருந்து விமானத்தில் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்வியை முன் வைத்தால் பெரிய தலைவர்களே சில நேரம் திணறிதான் போவார்கள். எனவே ரஜினிக்கு 7 பேர் குறித்து தெரியும், அது குறித்த அப்டேட் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

Read Also -> “பணமதிப்பிழப்பை அமல்படுத்திய முறை தவறு” - ரஜினிகாந்த் கருத்து 

அதேபோல ஒரு சிலர் ரஜினி இன்னும் கட்சித் தொடங்கவில்லை. அவர் இன்னமும் நடிகர்தான். அவரிடம் செய்தியாளர்கள் எல்லா கேள்வியும் கேட்டக் கூடாது. முதலில் அரசியல் கட்சி தொடங்கட்டும், அதன் பின்பு ரஜினியிடம் எல்லா கேள்வியும் கேட்கலாம். ரஜினிக்கு எல்லாம் தெரியும் என்றும் நாம் நினைக்க கூடாது. அவரிடம் பதிலை எதிர்பார்ப்பதும் தவறுதான் என்று சிலர் சற்றே நக்கல் தோனியுடன் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் ரஜினியின் அரசியலை தீவிரமாக எதிர்ப்பவர்கள் ரஜினிக்கு எல்லாமும் தெரியும் ஆனால் 7 பேர் விடுதலை குறித்து அவர் பதில் சொல்ல விரும்பாததையே தெரிகிறது என்று கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய சர்ச்சைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார் ரஜினி, அதில் "“பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை பற்றி எனக்கு தெரியாத அளவிற்கு தான் முட்டாள் அல்ல. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர்; கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் விடுதலை என்று கேட்டிருந்தால் புரிந்திருக்கும். வெறும் 7 பேர் விடுதலை என்று கேட்டதல் எனக்கு புரியவில்லை. பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன். மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து” என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close