[X] Close

இன்னும் நம்பவே முடியலை: ஆச்சரியத்தில் அதிதி

Kaatru-Veliyidai-heroin-Aditi-Rao-tell-about-that-experience

மணிரத்னம் படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை என்று நடிகை அதிதி ராவ் ஹைதாரி கூறியுள்ளார்.

கார்த்தி, அதிதி ராவ் ஹைதாரி, ஸ்ரத்தா உட்பட பலர் நடித்துள்ள படம், காற்றுவெளியிடை. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி அதிதி ராவ் கூறும்போது, ’எந்த நடிகைக்கும் மணிரத்னம் படங்களில் நடிக்கும் கனவு இருக்கும். எனக்கும் இருந்தது. எனது சிறு வயதில் அவர் படங்களை பார்த்துவிட்டு, அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்தக் கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது. படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. மணிரத்னம் படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை இன்னும் நம்ப முடியாமல் இருக்கிறேன். சினிமாவுக்கு மொழி பிரச்னையில்லை என்றாலும் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக பயிற்சி செய்தேன். கார்த்தியுடன் நடித்ததில் மகிழ்ச்சி. அவர் போன்ற ஒருவருடன் நடிக்கும்போது நடிப்பு இன்னும் எளிதாகிவிடுகிறது’என்றார் அதிதி.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close