ஓய்வு அறிவித்த அண்டர்டேக்கர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஓய்வு அறிவித்த அண்டர்டேக்கர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஓய்வு அறிவித்த அண்டர்டேக்கர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

டபிள்யுடபிள்யுஇ (WWE) எனப்படும் ரெஸ்ட்லிங் போட்டிகளில் கொடிகட்டிப் பறந்த அண்டர்டேக்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருதினங்களுக்கு முன் நடந்த ரெஸில்மேனியா போட்டியில் தோல்வியடைந்த அண்டர்டேக்கர், தனது கையுறையையும் தொப்பியையும் வீசிவிட்டு பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அண்டர்டேக்கர் முதன் முதலில் 1984-ஆம் ஆண்டு பங்குபெற்றது வேர்ல்ட் கிளாஸ் சாம்பியன்ஷிப் மல்யுத்தம் எனப்படும் WCCW-ல் தான். இங்கு இவரது ரிங் பெயர் டெக்சாஸ் ரெட் என்று இருந்தது. பிறகு இங்கிருந்து பல மல்யுத்த போட்டிகளில், அமைப்புகளில் போட்டியிட்டு வந்தார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ரெஸ்ட்லிங் போட்டிகளில் கொடி கட்டி பறந்தார். 1990-களில் வளர்ந்த குழந்தைகள் இவரின் பெயரை கேட்டாலே குதூகலம் அடைந்து விடுவார்கள் அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனக்கென இடமும் பிடித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் கோடிக்கணக்கானோர் ரசிகர்கள் அண்டர்டேக்கருக்கு தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com