ஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்
ஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்

இடைத்தேர்தல் வந்தால் ஆர்.கே.நகர் தொகுதி போல் 20 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் துணைப்
பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவர் எம்.எல்.ஏவாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்
நடைபெற்றது. 

இதில், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் மதுசூதனும், திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் மருதுகணேஷும்
சுயேட்சையாக பிரஷர் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரனும் போட்டியிட்டனர். 

இதில், டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் அபார வெற்றி பெற்று அதிமுகவை தோற்கடித்தார். இதைத்தொடர்ந்து 18 எம்.எல்.ஏக்களை
சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததால் ஏற்கனவே காலியாக உள்ள இரண்டு தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கு எப்போது
வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வரும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

அதனால் அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தலை சந்திக்க ஆயத்த வேலைபாடுகளை செய்து வருகின்றன. 

இந்நிலையில், இடைத்தேர்தல் வந்தால் ஆர்.கே.நகர் தொகுதி போல் 20 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும் என அக்கட்சியின்
துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், 234 தொகுதிகளிலும் எப்போது தேர்தல் வந்தாலும் அமமுக வெற்றி பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com