ரஜினிகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ’மக்கள் மன்றம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து வேலைப்பாடுகளையும் செய்து வருகிறார். கமல்ஹாசன் ’மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் கவுதமன் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழர்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், உரிமை ஆகியவற்றை காப்பதற்காக புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் வரும் தை மாதம் நடைபெறும் மாநாட்டில் புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம், கொள்கை உள்ளிட்டவைகள் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் சிறந்த கலைஞர்கள், அதை நான் மதிக்கிறேன் எனவும் ஆனால் இந்த மண்ணை ஆழ்வதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை எனவும் தெரிவித்தார்.
விஸ்வரூபம் படத்தின் போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய கமல் நாட்டை எப்படி காப்பாற்றுவார் எனவும் ரஜினிகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் எனவும் இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!