அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் அறிவித்துள்ளார்.
35 வயதான முனாஃப் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மொஹாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலம் தான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இவர் காலெடுத்து வைத்தார். அதே, இங்கிலாந்து தொடரில் தான் ஒருநாள் போட்டிகளிலும் முனாப் அறிமுக ஆனார். தோனி தலைமையிலான இந்திய அணி 2011 இல் உலகக் கோப்பை வென்ற போது, அந்த அணியில் முனாப் இடம்பெற்றிருந்தார்.
2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமான அவர், 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். சுமார் 5 ஆண்டுகள் மிகவும் நேர்த்தியாக வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் அவர் செயல்பட்டார்.
70 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள முனாஃப் பட்டேல் 86 விக்கெட்களை சாய்த்துள்ளார். அதேபோல், 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35 விக்கெட் எடுத்துள்ளார். 3 டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்களை சாய்த்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார். 2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் அறிமுகம் ஆனார். 2018 ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடவில்லை. 63 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 74 விக்கெட்களை சாய்த்துள்ளார்.
முனாஃப் படேலை பொறுத்தவரை அவரது சிறப்பான பங்களிப்பு இந்திய ஏ அணியில் விளையாடிய போதுதான். இந்திய ஏ அணிக்காக 140 போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்களை சாய்த்துள்ளார். 2011 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், முனாஃப் தொடர்ச்சிய ஏ அணி மற்றும் ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்தார். பரோடா மற்றும் குஜராத் அணிகளுக்காக அவர் விளையாடினார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் உள்ளூர் போட்டிகளையும் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக முனாஃப் படேல் அறிவித்துள்ளார். “2011 உலகக் கோப்பை வென்ற அணியில் நான் இடம்பெற்றிருந்தேன். அதனைவிட பெரிய விஷயம் ஒன்றும் இருக்க முடியாது. இளைஞர்களுக்கு இனி வாய்ப்பு செல்லட்டும்” என்கிறார் முனாஃப். பந்துவீச்சை தொடர்ந்து பயிற்சியாளராக தனது பணியை முனாஃப் தொடர்வார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்