தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவின் பெயரை அக்ரவான் என் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வேண்டுமென்று ஆக்ராவின் வடக்குப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்
இந்தியாவின் கட்டடக்கலைக்கு சான்றாக விளங்கும் காதல் சின்னம் தாஜ்மஹால். உலக அதிசயங்களில் ஒன்றான இது ஆக்ராவில் இருக்கிறது. பாரம்பரிய சின்னமாக இதை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் தாஜ்மஹாலைப் பார்க்க வருகின்றனர்.
இந்நிலையில் தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவின் பெயரை அக்ரவான் என் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வேண்டுமென்று ஆக்ராவின் வடக்குப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பிரசாத், பெயர் மாற்றம் குறித்து உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அரசர் அக்ரசனை பின் தொடர்பவர்கள் பலர் தற்போதைய ஆக்ராவில் வசித்து வருகின்றனர். வான் என்றால் காடு என்பதை குறிக்கிறது. ஆக்ராவும் காடுகளால் நிரம்பியிருக்கிறது. அதனால் ஆக்ராவின் பெயரை அக்ரவான் என பெயர் மாற்றம் செய்வது சரியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது உள்ள பெயரான ஆக்ரா என்பது அக்பர்பாத் என்ற பெயரில் இருந்து வந்தது என்றும் அதில் அர்த்தமொன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆக்ராவின் பெயர் மாற்றம் குறித்து பேசுவதற்கு தன் விரைவில் முதலமைச்சர் யோகியை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளியையொட்டி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யாநாத், அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைஸாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார். அதேபோல் தெலங்கானா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் ‘பாக்யாநகர்’ என பெயர்மாற்றம் செய்யப்படும் என பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்