Published : 10,Nov 2018 10:12 AM

“தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்” - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

deputy-chief-minister-o-panneerselvam-calls-foreign-businessmen-to-start-business-in-tamilnadu

தமிழகத்தில் நிலவும் சிறப்பான சூழலை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொண்டு புதிய தொழில்களைத் தொடங்க வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலீட்டாளர்களை வரவேற்கும் விதமாக, புதிய நிதி ஏற்பாட்டிற்கான வட்டமேசை மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொடங்கி வைத்த இம்மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் சம்பத், ஐக்கிய பொருளாதார மன்றங்களின் தலைவர் ஆரிப் புஹாரி மற்றும் இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் தலைவர் டூ மூசா ஹிடேம் ஆகியோர் பங்கேற்றனர். 

           

மாநாட்டில் பேசிய துணை முதலமைச்சர், மலேசிய தொழிற் நிறுவனங்களுடன் சிறந்த பொருளாதார, வர்த்தக உறவை தமிழகம் பேணி வருதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் புதிய தொழிலைத் தொடங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான வசதிகளை சிறப்பான முறையில் ஏற்படுத்தித் தருவதாகவும் தெரிவித்தார். இதனைப் பயன்படுத்தி புதிய தொழில்களைத் தொடங்கி வளர்ச்சியடைய முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்