[X] Close

இங்கிலாந்துடன் மோதும் தோனி தலைமையிலான 'இந்திய ஏ' அணி

MS-Dhoni--Yuvraj-Singh--Ashish-Nehra-In-Focus-As-India-A-Face-England

இந்தியா ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இன்று ‌விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனியின் தலைமையில் இந்தியா ஏ அணி களமிறங்குகிறது. மற்றொரு அனுபவ வீரரான யுவராஜ் சிங்கும் இந்தப்போட்டியில் களமிறங்கவுள்ளார். மும்பையில் நடைபெறும் இந்தப்பேட்டி மதியம் 1.30 மணியளவில் தொடங்குகிறது.


Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடியது. இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 0–4 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒரு நாள் போட்டி வரும் 15 ஆம் தேதி புனேவில் நடக்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி, தோனி தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் 2 பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close