[X] Close

24-வது நாளாக இறங்கு முகத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

Petrol-and-Diesel-Price-continue-downwards

பெட்ரோல், டீசல் விலை 24 நாட்களில் சரிவு முகமாகவே இருக்கிறது.

பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 80 ரூபாய் 90 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 ரூபாய் 72 காசுகளாகவும் உள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலையில், 18 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையில் லிட்டருக்கு 17 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 87 ரூபாய் 05 காசுகளாக உயர்ந்தது. அக்டோபர் 4-ஆம் தேதி மேலும் உயர்ந்து அதிகப்பட்சமாக  87 ரூபாய் 33 காசுகளாக இருந்தது.


Advertisement

இதற்குப் பின்னர் ஏற்ற, இறக்கத்தில் இருந்த பெட்ரோல் விலை, அக்டோபர் 16,17 தேதிகளில் 86 ரூபாய் 10 காசுகளாக இருந்தது. இதனைத்தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கும் பெட்ரோல் விலை, 24 நாட்களாக குறைந்து இன்று லிட்டருக்கு 80 ரூபாய் 90 காசுகளாக குறைந்துள்ளது. கடந்த 24 நாட்களில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாய் 20 காசுகள் குறைந்துள்ளது.

டீசல் விலையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் 16,17 தேதிகளில் லிட்டருக்கு 80 ரூபாய் 04 காசுகளாக இருந்தது. இதனைத்தொடர்ந்து படிப்படியாக குறைந்தும், இன்று 76 ரூபாய் 72 காசுகளாக உள்ளது. கடந்த 24 நாட்களில் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 32 காசுகள் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவே பெட்ரோல், டீசல் விலை குறைய காரணமாக சொல்லப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close