மண்டல பூஜைக்காக சபரிமலை வரும் 16-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் கோயிலுக்குச் செல்ல 539 இளம்பெண்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் கடந்த மாதம் 17-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அப்போது 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனால் சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக கடந்த திங்கள், மற்றும் செவ்வாய்கிழமை (நவம்பர் 4,5-ஆம் தேதிகள்) சபரிமலை கோயிலின் நடை திறக்கப்பட்டது. இதில் மொத்தமாக 7300 பேர் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். ஆனால் உண்மையான பக்தர்கள் வெறும் 200 பேர் எனக் கூறும் போலீசார் தரப்பு, மற்றவர்கள் அனைவரும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் எனக் கூறுகின்றனர்.
இந்நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை வரும் 16-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் கோயிலுக்குச் செல்ல 539 இளம்பெண்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்துள்ளனர். மண்டல பூஜையை முன்னிட்டு இதுவரை 3.5 லட்சம் பேர் தரிசனத்துக்காக ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 539 பேர் இளம்பெண்கள். அதாவது 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் கூட 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்டவர்கள் கோயிலுக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மண்டல பூஜையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?