[X] Close

உலக சாதனை படைத்த வைரம்

Worlds-most-expensive-diamond-Pink-Star-sells-for---57m-at-auction

ஹாங்காங்கில் இளம்சிவப்பு நிற வைரம் ஒன்று 463 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.

சொதேபி என்ற ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் 59.6 கேரட் அளவிலான அரிய வகை இளம்சிவப்பு நிற வைரம் ஏலம் விடப்பட்டது. மிக அழகாக ஜொலித்ததால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த வைரத்தை வாங்க கடும் போட்டி நிலவியது. முடிவில் இதனை ஹாங்காங்கைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் சுமார் 463 கோடிக்கு ஏலம் எடுத்தார். இது ஏலம் எடுக்கப்பட்ட அதிக தொகை என்ற உலக சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்னர், 374 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நீலநிற வைரமே இதுவரை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வைரம் என்ற சாதனையை படைத்திருந்தது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close