நகர்புற நக்சலைட்களை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பது ஏன் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலையொட்டி அம்மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது நக்சலைட்டுகள் தாக்கம் உள்ள பகுதியாகும். நக்சலைட்டுகள் கடந்த 10 நாட்களில் நடத்திய இரண்டு தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர், பொதுமக்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். இத்தகையை நிலையில் பிரதமர் மோடி பஸ்தாரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் பரப்புரையின் போது பேசிய மோடி, “நகரங்களில் ஏசி போட்ட வீடுகளில் கூட நக்சலைட்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் தூய்மையானவர்களாக இருப்பார்கள். அவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் படிப்பார்கள். நக்சலைட் தாக்கமுள்ள பகுதிகளில் உள்ள ஆதிவாசி குழந்தைகளை இந்த நகர்புற நக்சலைட்டுகள் ரிமோட் கண்ட்ரோல் போல் இயக்குகிறார்கள்.
நகர்புற நக்சலைட்டுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் போது, காங்கிரஸ் கட்சி ஏன் அவர்களை ஆதரிக்கிறது. சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்திற்கு வந்து நக்சலிசத்திற்கு எதிராக பேசுங்கள். நக்சலைட்டுகள் தீய எண்ணம் கொண்ட அரக்கர்கள்.
தன்னைப்போல வேறு எந்தப் பிரதமரும் பஸ்தார் மாவட்டத்திற்கு வருகை தந்ததில்லை. நான் இங்கு வெறும் கைகளோடு வரவில்லை. சில நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். இந்தப் பகுதிகளில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, ஏழ்மை மற்றும் வறுமையை ஒழிக்க நாங்கள் கடுமையாக பணியாற்றி வருகிறோம். இதற்கு முன்பாக, இந்தப் பகுதிகளில் நிறைய வளங்கள் இருந்தும் மாற்றம் எதுவும் நிகழவில்லை” என்று கூறினார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலையொட்டி நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான பரப்புரை நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சத்தீஸ்கரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!