[X] Close

அமெரிக்கத் தாக்குதல்: 35 பேரை காப்பாற்றிய இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!

California-Bar-Shooting--Customers-Broke-Glass-With-Stools--Helped-35-Out

கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் 35 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Advertisement

அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள தவுசண்ட் ஓக்ஸ் நகரில் பார்டர்லைன் பாரில் நேற்று இரவு திடீரென துப்பாக்கித் தாக்குதல் நடந்தது. மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார்.


Advertisement

இதனால் பாரில் இருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடி, ஒளிந்தனர். சிலர் கதறியபடி தரையில் படுத்து தப்பித்தனர். சிலர் டேபிளுக்கு அடியில் தஞ்சமடைந்தனர். இருந்தாலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது கடற்படை முன்னாள் வீரர் இயான் டேவிட் லாங் (28) என்பது தெரியவந்துள்ளது. அவரை, அங்கு வந்த போலீசார் சுட்டுக்கொன்றுவிட்டனர். இதையடுத்து இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.


இந்நிலையில், இந்த பாருக்கு அடிக்கடி வரும் மாட் வென்னர்ஸ்ட்ரோம் என்ற இளைஞர் 35 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் இப்போது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் இந்த பாருக்கு வரும் அவர், துப்பாக்கியால் ஒருவர் சுடுவதைக் கண்டதும் உடனடியாக காரியத்தில் இறங்கினார். 


Advertisement

தனது அருகில் இருந்தவர்களை டேபிளுக்கு பின்பக்கம் ஒளிய வைத்தார். சிறிது நேரத்தில், துப்பாக்கியால் சுட்ட நபர், அடுத்த ரவுண்ட்டுக்கு தோட்டாக்களை நிரப்புவதைக் கண்டார் வென்னர்ஸ்ட்ரோம்.

(வென்னர்ஸ்ட்ரோம்)

உடனே அங்கிருந்த டேபிள் ஒன்றை எடுத்து கண்ணாடி ஜன்னலை உடைத்தார். அது உடைந்ததும் அங்கிருந்த இளம் பெண்களையும் இளைஞர் களையும் அதன் வழியாக வெளியே குதிக்க வைத்தார். இப்படி 35 பேரை காப்பாற்றியுள்ளார். இதே போல மேலும் சிலர் மற்றொரு பக்கம் ஜன்ன லை உடைத்து வெளியேறியுள்ளனர். 

இதையடுத்து வென்னர்ஸ்ட்ரோமுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. அவரை ஹீரோ என புகழும் வலைத்தள வாசிகள், அவரைப் போல இளைஞர்கள்தான் அதிகம் தேவை என்றும் கூறியுள்ளனர். 


 


Advertisement

Advertisement
[X] Close