Published : 09,Nov 2018 05:09 AM

மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

madras-high-court-justice-huluvadi-g-ramesh-transfer-to-madyapradesh-high-court

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் குலுவாடி ஜி.ரமேஷ். இவர் கடந்த 1993 முதல் 2003 வரை  கர்நாடக மாநில மாவட்ட நீதிபதியாக பதவி வகித்துள்ளார். 

2003 ஆகஸ்ட் மாதம் கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பதவி நிரந்தரம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர் 2016 ஏப்ரல் 11ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு மூத்த நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தலைமை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற நேரத்தில் இருமுறை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக குலுவாடி ஜி.ரமேஷ் பதவி வகித்து வந்தார். 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 வது மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த இவர் தற்போது மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு 3வது மூத்த நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேல் முறையீடு செய்தார். ஆனால் நவம்பர் 22 ஆம் தேதிக்கு முன்பு மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்