Published : 05,Apr 2017 08:06 AM
அடையாளக் குறியிட்டு பணப்பட்டுவாடா : தமிழிசை

ஆர்.கே.நகரில் உள்ள வீடுகளில் அடையாளக் குறியிட்டு அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வது நடக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.கே.நகர் இடைதேர்தலில், வேட்பாளர்கள் ஏழை மக்களை பணம் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள். அதிகளவில் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும் தொடர்ந்து பணப்பட்டுவாடா நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆர்.கே.நகரில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என கூறினார். ஆர்.கே.நகரில் உள்ள வீடுகளிலும், பேருந்துகளிலும் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். பணப்பட்டுவாடா நடப்பதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாங்கள் புகார் மனு கொடுத்துள்ளோம். திமுகவினரும் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டிய தமிழிசை, பலத்த கண்காணிப்புடன் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.