[X] Close

தமிழகத்தில் 13 லட்சம் பேர் புதிய வாக்காளராக சேர விண்ணப்பம்

13-Lakhs-new-voters-in-Tamilnadu

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 


Advertisement

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டு‌ தேர்தல் ஆணையம் சார்பில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 

இந்நிலையில், செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மொத்தம் 13 லட்சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளனர். இறுதி வாக்களர் பட்டியல் ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close