தமிழகத்தில் இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சலால் 17 பேர் உயிரிழந்திருப்பதும், டெங்கு காய்ச்சலில் 12 பேர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல்கள் காரணமாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள், சேலம், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் 74 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு 54 பேரும், பன்றிக்காய்ச்சல் அறிகுறியோடு 10க்கும் அதிகமானோரும் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதேபோல, சென்னை குன்றத்தூரில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்தார். குன்றத்தூர், கந்தசாமி நகரை சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி ஜெயா, கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் குரோம்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பன்றிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டதையடுத்து அவர் நந்தம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, ஜெயா உயிரிழந்தார். இந்நிலையில், தமிழகத்தில் பன்றிகாய்ச்சலால் இந்தாண்டு பாதிக்கப்பட்ட 1,020 பேரில் 17 பேர் உயிரிழந்திருப்பதாவும், 12 பேர் டெங்கு காய்ச்சலில் உயிரிழந்திருப்பதாகவும், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காய்ச்சலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!