Published : 06,Nov 2018 12:01 PM

“குழந்தையைக் கடத்துபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்” - ரஜினிகாந்த்

Rajinikanth-said-about-Child-Kidnappers-and-Child-Begging

குழந்தைகளை கடத்தும் நபர்களையும், அவர்களை வைத்து வியாபாரம் செய்பவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவரது சினிமா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா? என்ற கேள்விக்கு, எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும், அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருர் உச்சத்தில் இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் அவரது எளிமையான வாழ்க்கை பற்றிய கேள்விக்கு மிக இயல்பாக பதிலளித்தது காண்பவர்களை ஈர்க்கும் படி இருந்தது.  

அத்துடன் கடத்தப்படும் குழந்தைகளை பார்த்தால் எமோஷன் ஆகும் என்றும், கடத்தப்பட்டப்பட்ட குழந்தைகளை கொண்டு சென்று பிச்சை எடுக்க வைப்பதை பார்த்தால் கோபம் வரும் எனவும் ரஜினி தெரிவித்துள்ளார். இதுபோன்ற குழந்தைகளை வைத்து பிஸ்னஸ் செய்வதை பார்த்தால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தோன்றும் எனவும் அவர் கூறியுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்