
சீனாவின் தென் மேற்கு நகரமான வென்சானில் பகல்நேரங்களில் நாய்களை வெளியே கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களுக்கும், பூங்காக்களுக்கும், வணிக வளாகங்களுக்கும் உடன் அழைத்து வரவும் தடை செய்யப்பட்டுள்ளது.
நாயினால் பரவும் ரேபிஸ் நோயினால் சீனாவில் பலர் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சீனாவில் ஆண்டுக்கு 2000 பேர் ரேபிஸ் நோயினால் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து சீனாவில் பல இடங்களிலும் நாய் வளர்ப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது சீனாவின் தென் மேற்கு நகரமான வென்சானில் பகல்நேரங்களில் நாய்களை வெளியே கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 7 மணிக்கு மேலும், இரவு 10 மணிக்குள்ளும் நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து வரக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நாய்களை 3 அடிக்கு குறைவான பிடியிலேயே கட்டி வைக்க வேண்டும். நாய்களை சிறுவர்கள் யாரும் பிடித்து வெளியே வரக்கூடாது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்டுப்பாட்டில்தான் நாய்கள் வெளியே கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வென்சான் நகரம் மட்டுமின்றி சீனாவின் பல இடங்களிலும் நாய்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பீஜிங் நகரில் பெரிய வகை நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நகரங்களில் எவ்வளவு பெரிய நாய்கள் வளர்க்கப்பட வேண்டும், அதே போல் நாய்களை கட்டிவைத்திருக்கவே வேண்டும். வெளியில் சுதந்திரமாக நடமாடவிடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.