சட்டவிரோதமாக ‘சர்கார்’ படத்தை வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ்

சட்டவிரோதமாக ‘சர்கார்’ படத்தை வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ்
சட்டவிரோதமாக ‘சர்கார்’ படத்தை வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ்

‘சர்கார்’படத்தை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் ‘சர்கார்’ படத்தை இணைதளத்தில் முறைகேடாக வெளியிட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ்.  

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘சர்கார்’. இப்படத்தின் கதைத் திருட்டு குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில் இந்தப் படத்தை தியேட்டர்கள் தவிர வேறு எந்த வடிவத்திலும் வெளியிடக்கூடாது என படத்தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதில், ‘சர்கார்’ படத்தின் விநியோகம், சிடி, டிவிடி, கேபிள் டிவி, இணையதள ஒளிபரப்பு உள்ளிட்ட அனைத்து உரிமங்களும் தங்களிடமே உள்ளதாகவும் தியேட்டர் தவிர வேறு எந்த வடிவிலும் ‘சர்கார்’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ‘சர்கார்’ படத்தை இணையதளத்திலோ, சேனல்களிலோ, செல்போனிலோ, சிடி, டிவிடி, கேபிள் டிவியிலோ வெளியிடக்கூடாது எனத் தடை விதித்தது. 

இதனைத்தொடர்ந்து ‘சர்கார்’ படத்தின் ஹெச்.டி பிரிண்ட் விரைவில் இணைதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கர்ஸ் பெயரில் நேற்று ட்வீட் செய்யப்பட்டது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘சர்கார்’ படத்தை இணையதளத்தில் முறைகேடாக வெளியிட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com