Published : 05,Apr 2017 02:56 AM
அமெரிக்காவில் பாடகர் எஸ்பிபியின் பாஸ்போர்ட் திருட்டு

பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் பாஸ்போர்ட், அமெரிக்காவில் திருடப்பட்டது.
பாஸ்போர்ட், திருடப்பட்டது தொடர்பாக அவரது முகநூலில் அவர் தெரிவித்துள்ளார். பையில் வைத்திருந்த பாஸ்போர்ட் மட்டுமின்றி கிரடிட் கார்டுகள், ரொக்கப் பணம், ஐபேட் ஆகியவையும் திருடு போனதாக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள தூதரகத்தில் எஸ்பிபி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 24 மணி நேரத்தில் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு பாஸ்போர்ட் நகல் வழங்கப்பட்டது. திருடு போன பொருட்களை தேடும் பணி நீடிக்கிறது.