Published : 10,Jan 2017 05:34 AM
பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் கடிதம்

ஜல்லிக்கட்டு, பொங்கல் விடுமுறைக்காக பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கட்டாய விடுமுறை விடுப்பில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் என்பதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.