Published : 05,Nov 2018 07:07 AM

தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை ! சிசிடிவி காட்சிகள்..!

Leopard-enters-Gujarats-state-secretariat

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் சிறுத்தை நுழைந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தலைமைச் செயலகத்தின் முன்பக்க இரும்புக் கதவின் கீழ்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்று நுழையும் காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தலைமைச் செயலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதிகாலை 2 மணியளவில் சிறுத்தை தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

இதனிடையே சிறுத்தை புகுந்ததன் காரணமாக அதிகாரிகள் யாரும் தலைமைச் செயலகத்திற்குள் இன்று அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு மட்டுமின்றி சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பாக கூண்டு வரவழைக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்